புதுச்சேரியில் மக்கள் தீர்ப்பை மாசுபடுத்தி கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என பாஜகவுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுவையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் திடீரென புதுவையில் 3 பாஜக நியமன உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது
ஏற்கனவே 6 சுயேச்சைகள் புதுவையில் இருப்பதால் அவர்களை வைத்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஏற்கனவே பாஜகவின் இந்த முயற்சிக்கு தடை போட வேண்டுமென திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இந்த நிலையில் தற்போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தனது கண்டனத்தை பாஜகவுக்கு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிக்க வேண்டாம் என்றும், மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம் என்றும் 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்