ஐபிஎல்க்கு வாய்ப்பில்லை; இலங்கை கிளம்பும் இந்திய அணி!

செவ்வாய், 11 மே 2021 (15:55 IST)
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட நிலையில் இந்திய அணியில் இலங்கை சுற்றுபயண ஆட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஐபிஎல் போட்டிகள் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயண ஆட்டம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் ஜூலை 13 முதல் 19 வரை 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஜூலை 22 முதல் 27 வரை 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரிலும் இந்திய அணி விளையாடுவதாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்