வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 26 மே 2024 (08:12 IST)
வங்க கடலில் 'ரீமால்' புயல் தோன்றியுள்ளதை அடுத்து தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பது அதன் பின்னர் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி வடகிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தகவல் வழியாக உள்ளன.

சென்னையை பொருத்தவரை வானம் சில பகுதிகளில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்