தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Mahendran

வியாழன், 23 மே 2024 (17:21 IST)
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று காற்றழுத்த மண்டலமாக மாறும் என்றும் அதன் பின்னர் வரும் 25ஆம் தேதி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் சற்று முன் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதாவது தமிழகத்தின் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, சேலத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யும் என்றும்,  ராமநாதபுரம், சிவகங்கை, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்