வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Siva

வெள்ளி, 24 மே 2024 (07:23 IST)
வங்கக் கடலில் புயல் சின்னம் தோன்றியதை அடுத்து தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றிய நிலையில் அது இன்று ரெமல் என்ற புயலாக மாறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று 26 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையை பொருத்தவரை சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 26 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் நீர்வீழ்ச்சி மலை பிரதேசங்கள் போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்