ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள்.. அரசின் முடிவால் தொழிலாளர்கள் அதிர்ச்சி..!

Mahendran
செவ்வாய், 18 ஜூன் 2024 (11:42 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் பணிக்கு அமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்றும் நிரந்தர ஊழியர்களை அரசு வேலைக்கு எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் நடத்தினர்களை பணியமர்த்த நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசு போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் நடத்துநர்களை நியமனம் செய்வதற்கு தங்களது அதிருப்தியை போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விரைவில் ஆலோசனை செய்து போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
நிதி நெருக்கடி காரணமாகவே அரசு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை தேர்வு செய்து வருவதாகவும் நிதி நெருக்கடி சரியானதும் நிரந்தர ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்