விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன்? அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (11:56 IST)
மதுக்கடைகளை அதிகம் திறந்து வைத்துவிட்டு மதுவுக்கு எதிராக விழிப்புணர்ச்சி நடத்தி என்ன பயன் என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்
 
மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்துவிட்டு விழிப்புணர்ச்சி நடத்துவதால் என்ன பயன் என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள டாக்டர் ராம்தாஸ் மாணவர்களை போதையின் பிடியிலிருந்து மீட்க மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் புகையிலைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
 
மது போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் இந்த கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கேள்வி நியாயமான கேள்வி என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்