திமுக எம்பி கதிர் ஆனந்த்-ன் குடிநீர் ஆலைக்கு சீல் ! பரபரப்பு தகவல்...

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (17:28 IST)
திமுக எம்பி கதிர் ஆனந்த்-ன் குடிநீர் ஆலைக்கு சீல் ! பரபரப்பு தகவல்...
திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும் , வேலூர் தொகுதி பாராளுமன்ற எம்பியுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டத்தில் செயல்படும் 40 குடிநீர் ஆலைகளில் 37 ஆலைகள் அனுமதியின்றி செயல்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வேலூர் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறர்,. அதன் அடிப்படையில், இன்று வேலூர் பாரளுமன்ற தொகுதி எம்பி கதிர் ஆனந்தின் குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் கலெக்டர் கூறியுள்ளதாவது, நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதியில்லாத கேன் குடிநீர் ஆலைகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கதிர் ஆனந்த் எம்.பி கூறியுள்ளதாவது; கடந்த 2003 ஆம் ஆண்டிலேயே மத்திய அரசின் கிரீன் பெஞ்ச்சில் அனுமதி வாங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்