10 நாள் ஆர்பாட்டத்தை துவங்கிய திமுக & கோ(ஸ்)

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:24 IST)
இன்று தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தங்களது ஆர்பாட்டத்தை துவங்கியுள்ளனர். 
 
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தங்களது ஆர்பாட்டத்தை துவங்கியுள்ளனர். 
 
ஆம், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுப்பது, மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு,  வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் போராடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்