இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்ள அதிமுக – பாஜக திட்டமிட்டுள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் பகுதிகள் பங்கீடு குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுக – பாஜகவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இரு கட்சிகளும் போட்டியிடும் பகுதிகள் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.