பானி பூரியில் புழு… வட மாநில இளைஞரை தாக்கிய மக்கள்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:09 IST)
அம்பத்தூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கெட்டுப்போன உருளைக்கிழங்கில் புழு ஒன்று கிடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் இருந்து சிறு நகரங்கள் வரை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் இது போல ஒரு இளைஞரிடம் மக்கள் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது ஒரு பானிபூரியில் வைக்கப்பட்டு இருந்த உருளைக் கிழங்கில் புழு ஒன்று காணப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமானவர்கள் அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர். ஆனால் கடைக்கு அவர் முதலாளி இல்லை என்பதும் வேலைக்குதான் இருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்