என்னுடைய வேட்பு மனுவையே மாற்றி விட்டனர் - தீபா பகீர் புகார்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (17:55 IST)
ஜெ.வின் அண்ணம் மகள் தீபா தற்போது தலைமை அலுவலகம் வந்து தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஒரு புகார் மனு அளித்தார்.


 
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.வேட்புமனு தாக்கல் செய்யும் மனுவுடன் படிவம் 26ஐ நிரப்பித்தரவில்லை. அந்த மனுவில் வேட்பாளர் பற்றிய பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.  முக்கியமாக, வாக்களரின் வங்கி கணக்குகள், குற்றப்பிண்ணனி, சொத்துக்கள் மற்றும் வழக்குகள் குறித்த விபரங்கள் நிரப்பபட்டு வேட்பு மனுவுடன் கொடுக்கப்பட வேண்டும். இந்த படிவத்தை கொடுக்காததால் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்து, அங்கு தலைமை அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
நிராகரிக்கப்பட்ட எனது அசல் வேட்பு மனுவை தற்போதுதான் வாங்கிப் பார்த்தேன். அதில் பல தாள்கள் பிய்த்து இருந்தன. முக்கியமாக, எனது வேட்பு மனுவில் இருந்த இரண்டு தாள்களை வேண்டுமென்றே மாற்றியுள்ளனர். அது என்னுடைய மனுவே அல்ல. வழக்கறிஞர் உதவியுடன் தயாரித்த அந்த மனு தவறாக இருக்க வாய்ப்பில்லை. 
 
நான் தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஒரு மூத்த அமைச்சரே என்னை மிரட்டினார். எனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு முறைகேடுகளுடன் தேர்தலையே நடத்துவதற்கு அதை நடத்தாமலேயே இருக்கலாம்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்