தொடர் விடுமுறைக்குப் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் இன்று தொடக்கம்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (10:24 IST)
தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தமிழக சட்டசபையில் தொடங்குகிறது.
2018-2019 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் கடந்த 15-ந் தேதி தாக்கல் செய்தார். பின் 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்ட சபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. சட்டசபையில் குரங்கணி தீவிபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
 
இந்த பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22 ந் தேதி வரை நடைபெறவிருக்கிறது.  பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்