புத்தாண்டை கொண்டாட குவியும் கூட்டம்..! கடற்கரை சாலைகள் தற்காலிகமாக மூடல்!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (14:50 IST)
உலகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில் புதுச்சேரியில் அதிக கூட்டம் காரணமாக கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.



இன்று 2023ம் ஆண்டின் இறுதி நாளில் புதிய ஆண்டை வரவேற்க மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். புத்தாண்டு நாளில் மக்கள் தேவாலயம் செல்வது மட்டுமல்லாமல், சென்னை, புதுச்சேரி பகுதிகளில் கடற்கரை செல்வதும் வழக்கமாக உள்ளது. இன்று அதிகளவிலான மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்பதால் சென்னை கடற்கரை சாலையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் நேரமாக ஆக அதிகரித்து வருகிறது. இதனால் புதுச்சேரி கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்களுக்கு மட்டும் செயிண்ட் ஆஞ்சே வீதி, குர்கூப் வீதி, செஞ்சி சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நாளை காலை 9 மணி வரை அப்பகுதியில் இந்த போக்குவரத்து தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்