புத்தாண்டு கொண்டாட்டம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சனி, 30 டிசம்பர் 2023 (18:27 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகமாக மக்கள் கூடும் கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் 18000 போலீஸார் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.
 
சென்னையில் 420 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படவுள்ளது. வாகன ரேஸ்  நடப்பதைத் தடுக்க 25 கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

*''மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

*இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.


*குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றி கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

*மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்.

*புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது அருந்த அனுமதி கிடையாது'' என்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு ஆணையர் அஸ்ரா கர்க் பேட்டியளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்