விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம்.. இரவு 1 மணி வரை மது விற்பனை அனுமதி!

ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (12:29 IST)
நாளை புது வருடம் தொடங்க உள்ள நிலையில் இன்று ஏராளமானோர் அதற்கு தயாராகி வரும் நிலையில் புதுச்சேரியில் இரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.



2023ம் ஆண்டு முடிந்து 2024ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் புது வருடத்தை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் விமர்சையாக நடந்து வருகிறது.

புத்தாண்டு சமயத்தில் இளைஞர்கள், வெளிநாட்டு பயணிகள் பலரும் புதுச்சேரிக்கு சென்று குவிகின்றனர். அங்கு மதுவிருந்து, இசை என புத்தாண்டு கொண்டாட்டம் விமர்சையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டும் ஏராளமான பயணிகள் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் குவிந்துள்ள நிலையில் ஏராளமான தங்கும் விடுதிகள் நிறைந்துள்ளது.

வழக்கமாக புத்தாண்டு இரவில் புதுச்சேரியில் இரவு 12 மணி வரைக்கும் மது விற்பனை அனுமதிக்கப்படும். இந்த முறை நிறைய பயணிகள் வந்துள்ள நிலையில் மது விற்பனை நள்ளிரவு 1 மணி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்