தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு !
உலகம் முழுவதும் பெரும் சீனா முதற்கொண்டு பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது. இதுவரை 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் ஏற்கனவே இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மார்ச் 17 ஆம் தேதி, அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரொனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.