இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்களும், ஊழியர்களும் கடும் பண நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதை திரும்ப செலுத்த முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில் அனைத்து வகை வங்கிக் கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும். இந்த காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுத்துறை வங்கி அதிகாரிகளை தமிழக முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்!” என கூறியுள்ளார்.