கொரொனா: தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் சி12 !

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (16:39 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் வீரியம் கொண்ட சி12 வகை கொரொனா வைரஸ் தற்போது பரவிவருவதால்  கொரொனா 3 வது அலை தொடங்கிவிட்டதோ என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ் பாதிப்பால் ஏற்னவே ஆண்டிபாடிகளை உருவாக்கிய நோயாளிகளையும் மீண்டும் தொற்றும் திறன், சி12 வகை வைரஸ்களுக்கு இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளரக்ள் தெரிவித்துள்ளனர். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்