தமிழகத்தில் கொரொனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால், கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உழவர் சந்தைகளில் 50% கடைகள் சுழற்சி முறையில் இயங்கலாம் – வாரச்சந்தைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் வருவோர் இரண்டு தவணை ஊசி செலுத்தி இருக்க வேண்டும், திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் சுமார் 50 பேர் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் நகைக்கடைகள், துணிக்கடைகள், பூங்காக்கள், மால்கள் இயக்கத் தடை விதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சிய சமீரன் உத்தரவிட்டுள்ளார்.