தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு வாழ்த்துகள- டிடிவி தினகரன்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (13:28 IST)
தேசிய விளையாட்டு போட்டிளில்  வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 36 வது தேசிய விளையாட்டுப்  போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், உள்ளிட்ட 6 நகரகளில்  நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இதன் தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்.

.இப்போட்டியில், 36 விளையாட்டுகளில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்றுள்ளனர். மேலும், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் மும்முனைத் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த திரு.பிரவின் சித்ரவேலும்,..   வாள் வீச்சு போட்டியில் பவானி தேவி ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். இவர்களுக்கு தினகரன் வாழ்த்துகள் தெரிவித்து டிவீட் பதிவிட்டுள்ளார்.
அதில்,

‘’குஜராத்தில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் மும்முனைத் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த திரு.பிரவின் சித்ரவேல் அவர்களுக்கும்..   வாள் வீச்சு போட்டியில்  தங்கம் வென்றிருக்கும் வீராங்கனை பவானி தேவி அவர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்கள் மேலும் பல சாதனைகளைப் புரிந்து தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டுகிறேன’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்