கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா; கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (08:36 IST)
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்து கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம் திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து திரையரங்குகள், மால்கள், பூங்காக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட அனுமதி இல்லை

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்படலாம். பொள்ளாச்சி மாட்டுச்சந்தை இயங்க தற்காலிக தடை

கோவை விமானம் நிலையம் வருவோர் 72 மணி நேரத்திற்குள்ளாக எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்