கர்நாடகா, ஆந்திராவுக்கு கிளம்பியது முதல் பஸ்!

திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (06:26 IST)
தமிழகத்தில் இருந்து இன்று முதல் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு பேருந்துகள் கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அதேபோல் ஆந்திர மாநிலத்திற்கும் சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து நள்ளிரவு முதலே முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அண்டை மாநில பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது 
 
இதனை அடுத்து ஆகஸ்ட் 23 முதல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதன்படி இன்று காலை கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் தமிழகத்தில் இருந்து பேருந்துகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்