நான் சாய்வதற்கு கிடைத்த அந்தக் கடைசித் தோளை விட்டேன்: முரசொலி செல்வம் குறித்து முதல்வர்..!

Mahendran
வியாழன், 10 அக்டோபர் 2024 (13:59 IST)
நான் துவண்ட போது சாய்வதற்கு கிடைத்த ஒரே தோள் சரிந்து விட்டது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், முரசொலி செல்வம் மறைவு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் இன்று பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருடைய மறைவு முதல்வர் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல்வர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 
 
இந்த நிலையில் முரசொலி செல்வம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட இருப்பதாகவும் இன்று மாலை அவருக்கு இறுதி சடங்கு செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். 
 
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை - கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்