என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர்.. முதல்வருக்கு நன்றி சொன்ன செந்தில் பாலாஜி..!

Siva

திங்கள், 30 செப்டம்பர் 2024 (06:33 IST)
என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி சொன்ன செந்தில் பாலாஜியின் பதிவு வைரலாகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
திரு. செந்தில்பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது ன்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது' என இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப்பிடித்துள்ள தாயுமானவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முக ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி.. 
 
பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ? உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்
 
முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்து கூறியதாவது: 
ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்