அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சால், பெண்களின் வாக்குகளை திமுக இழக்கலாம் என்றும், அவர் அமைச்சராக தொடர்ந்தால் திமுக ஆட்சியை இழக்க வாய்ப்பிருப்பதாகவும் உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளதாக முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோல், தற்போது இந்து மக்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை எடுத்து, அவரது கட்சிப்பதவி மட்டும் பறிக்கப்பட்டது.
இதனால், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பயணம் மற்றும் பல்வேறு சலுகைகள் அனைத்தும், பெண்களுக்கு எதிராக அமைச்சர் பொன்முடி பேசிய கருத்தால், திமுக பெண்களின் வாக்குகளை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தான் ஒரே வழி என ஆட்சியாளர்களுக்கு உளவுத்துறை அறிக்கை அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து, கட்சி பதவியிலிருந்து நீக்கிய பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் நீக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.