தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றதாகவும் டெல்லியில் நாளை நடைபெறும் I.N.D.I.A' கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தமிழக அரசு பொது மக்களை மீட்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே கிட்டத்தட்ட 10 அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் இருந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றனர்.
இந்த நிலையில் நாளை டெல்லியில் நடைபெறும் I.N.D.I.A' கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கோவையிலிருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அதுமட்டுமின்றி தென் மாவட்ட மழை பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்ய பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரி கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க பிரதமரை அவர் நேரில் சந்தித்து வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.