தாமிரபரணி வெள்ள நீரை வறண்ட நிலங்களில் திருப்பி விடுங்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (17:30 IST)
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உபரிநீரை வறண்ட நிலங்களில் திருப்பிவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



தென் மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதலாக விடாது கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அணைகள் பலவும் நிரம்பியுள்ளதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நீர் இணைப்பு திட்டத்தின் மூலமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட நிலப்பகுதிகளுக்கு திருப்பி விட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய பகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளும் நீர்பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்