பிச்சிகிட்டு கொட்டும்... மழையோட ஆட்டத்த அடுத்த வாரம் பாப்பீங்க...

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (09:55 IST)
இன்னும் இரண்டு நாட்களில் சென்னையில் வழக்கத்தை விட நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. காற்றின் திசை மாற்றம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், காற்றில் திசை தென்மேற்கில் இருந்து வடகிழக்கு நோக்கி செல்வதால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். குறிப்பாக ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யுமாம். 
 
அதேபோல் தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், வங்கக்கடலில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்