அதில் மத்திய அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், பி.டி.அரசகுமார், ஹெச்.ராஜா ஆகியோரின் பெயர் பரிசீலனையில் உள்ளதாம். இவர்களில் ஒருவர் எப்படியும் பதவியை பிடிக்க வேண்டும் என டெல்லியை சுற்று வந்து சிபாரிசு தேடி வருகிறார்களாம்.
தமிழகத்தில் அடுத்து உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், வரவுள்ளதால் வலுவான தலைவரை களமிறக்க வேண்டும் என பாஜக தேசிய தலைமை நினைக்கிறதாம். ஆனால், மீண்டு தமிழிசையே தலைவராக தொடர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.