தமிழகத்தின் ஒப்புதல் அவசியம் - மேகதாதுவில் அணைகட்ட அனுமதி மறுப்பு

புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:15 IST)
காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில் அதற்கு மத்திய சுற்றுசூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது.

கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சில ஆண்டுகளாக தீவிரம் காட்டி வருகிறது. அதறகான வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர் வள மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்குக் கர்நாடக அரசு கடந்த ஆண்டு அனுப்பி வைத்தது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து இதற்குப் பலமான எதிர்ப்பு எழுந்தது. அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். மேலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

இது சம்மந்தமாக டெல்லியில் நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழுக் கூட்டம் கடந்த ஜூலை 19 ஆம் தேதி நடந்தது. அதன் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூடுதல் விவரம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த அணைக் கட்ட தமிழக தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அம்மாநிலத்தின் ஒப்புதல் இன்றியமையாதது எனவும் இருமாநிலங்களும் இணைந்து இணக்கமான தீர்வை எடுத்தால் மட்டுமே மேற்கொண்டு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்