ஒமிக்ரான் பரவல்... தீவிர கண்காணிப்பில் சென்னை!!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (11:01 IST)
கொரோனா விதிமுறைகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கடற்கரைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் சென்னையில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கவும், விதிமுறைகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 
 
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்