இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1,700 ஆக உயர்வு!

திங்கள், 3 ஜனவரி 2022 (10:13 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறி வருவதாக கூறப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1,500-ஐ தாண்டியுள்ளது.

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் 23 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 1,700 ஆக பதிவாகியுள்ளன. ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 639 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 510, டெல்லியில் 351, கேரளாவில் 156, குஜராத்தில் 136, தமிழ்நாட்டில் 121 மற்றும் ராஜஸ்தானில் 120 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொறு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்