இதற்கிடையில் அவர் மி டூ சர்ச்சையிலும் சிக்கியதால் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது அவர் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார். அந்த படத்துக்கு வஞ்சம் தீர்த்தாயடா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.