அடுத்த 2 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (19:29 IST)
அடுத்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் வடகிழக்கு பருவ மழை நிறைவு பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும் அவ்வப்போது காற்றின் வேக திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
 மேலும் கடலோர பகுதிகளில் 25ஆம் தேதி வரை மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்