தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (14:13 IST)
தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் கூடுமென்றும் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை முதல் 13-ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்