5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட், 2 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (17:56 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் இரண்டு மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடுமையான பனி நிலவி வருகிறது என்றும் இதனால் சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு இருப்பதால் விபத்துக்களில் இருந்து வருவதாகவும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய 5 மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் மோசமான மூடுபனி இருக்கும் காரணத்தினால் ரெட்அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல் ராஜஸ்தான் பீகார் ஆகிய 2 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட ஏழு மாநிலங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.