திராவிட நாடு என்று சொன்னவர்களை தமிழ்நாடு என சொல்ல வைத்துவிட்டார் கவர்னர்: நெட்டிசன்ஸ்

திங்கள், 9 ஜனவரி 2023 (09:12 IST)
இதுவரை திராவிட நாடு, திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்களை தமிழ்நாடு என்று தமிழக ஆளுநர் ரவி சொல்ல வைத்து விட்டார் என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். 
 
திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் தமிழ் நாடு என்று சொல்வதை விட திராவிட நாடு என்று சொல்வதை பெருமையாக கருதி வந்தனர். இப்போதும்கூட திராவிட மாடல் என்று தான் கூறி வருகிறார்களே தவிர தமிழர் மாடல், தமிழ்நாடு மாடல் என்று கூறுவதில்லை. 
 
இந்த நிலையில் சமீபத்தில் கவர்னர் ரவி, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியானது என்று கூறிய நிலையில் தமிழ்நாடு என்று தான் கூறுவோம் என திமுகவினரை அவர் சொல்ல வைத்து விட்டார் என நெட்டிசன்ஸ் பதிவு செய்து வருகின்றனர்
 
திராவிட நாடு என்ற சொல்லையே மறந்து தற்போது திமுகவினர் உள்ளிட்டவர்களை தமிழ்நாடு என்று சொல்லி வைத்துவிட்ட கவர்னருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் நெட்டிசன்கள் பேசிவருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்