அண்ணா சாலை உணவக ஊழியருக்கு கொரோனா: பார்சல் வாங்கி சென்றவர்களை தேடும் பணி தீவிரம்

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (12:31 IST)
சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்தே அந்த உணவகம் செயல்பட்டதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் அந்த உணவகத்தில் பார்சல் வாங்கி சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மார்ச் 24ஆம் தேதி முதல் இன்று வரை இந்த உணவகம் செயல்பட்டு வந்ததால் இந்த ஊரடங்கு நேரத்தில் ஏராளமானவர்கள் இந்த உணவகத்தில் உணவுகளை வாங்கி சென்றதாக தகவல் வெளிவந்துள்ளதால் அந்த உணவகத்தில் பார்சல் வாங்கி சென்றவர்கள் உடனடியாக தங்களை பரிசோதித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அந்த அந்த உணவகத்தின் ஊழியர்கள், உணவு வாங்கி சென்றவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே கோயம்பேடு தொடர்பால் சென்னை உள்பட தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உணவகம் மூலமும் புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்