காதல் மறுப்பு திருமணம்… உறவினர்களை சிறுநீர் குடிக்கச் சொல்லி கொடூரம்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (18:33 IST)
தருமபுரி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் தலைமறைவாகியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செம்மனஹள்ளி என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மோகனா என்ற மற்றொரு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதற்கு மோகனாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து மோகனாவின் உறவினர்கள் ரமேஷின் உறவினர்கள் மூன்று பேரைக் கடத்தில் அடித்துத் துன்புறுத்தியதோடு மட்டும் இல்லாமல் சிறுநீர் கழித்து அதைக் குடிக்கச் செய்துள்ளனர். இது சம்மந்தமாக சம்மந்தப்பட்டவர்கள் பாலக்கோடு பகுதியில் புகார் அளித்ததை அடுத்து 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்