சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து...உயிர் தப்பிய பயணிகள்~!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (18:27 IST)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன் குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் கோயமுத்தூர் புறப்பட்டுச் சென்றது.

 இரவு நேரம் என்பதால், பேருந்தில் பயணிகள்  உறங்கிக் கொண்டிருந்தனர்.  அப்போது, சில கிமீ தூரம் சென்ற பின், அப்பேருந்தில் திடீரென்று தீப் பிடித்தது.இதனை அறிந்த பயணிகள் சுதாரித்துக்கொண்டனர். தீப்பரவுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டு நர், பேருந்தை சாலைரோரம் நிறுத்தினார்.

உடனே பேருந்தில் இருந்து, பயணிகள் வேகமாக இறங்கினர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்