தொடர்ந்து 4வது நாளாக உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்!

திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:37 IST)
திருச்செந்தூர் கடல் கடந்த 3 நாட்களாக உள்வாங்கிய நிலையில் இன்று நான்காவது நாளாகவும் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு மாதமும் திருச்செந்தூர் கடலில் அமாவாசை தினத்தன்று கடல்நீர் லேசாக உள்வாங்குவதும் அமாவாசை முடிந்ததும் இயல்பு நிலை திரும்புவது வழக்கமாக உள்ளது 
 
ஆனால் இந்த மாத அமாவாசைக்கு முன்பே ஒரு நாளும் அதன் பின்பு இரண்டு நாளும் என மூன்று நாட்கள் கடல் உள்வாங்கியது. இதனை அடுத்து அமாவாசை முடிந்த பிறகு இன்றும் கடல் உள்வாங்கி இருப்பது திருச்செந்தூர் பகுதி மக்கள் மற்றும் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடல் நீர் சுமார் 200 அடி வரை உருவாகியுள்ளதால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்