சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்! போலீஸார் சோதனை

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (20:13 IST)
சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் உள்ள 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு நபர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த  நபர் யாரென்று விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்