விபத்தில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு-இந்தியன் ஆயில் கார்பரேசன்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (20:00 IST)
சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள ஐஓசி( இந்தியன் ஆயில் கார்பரேசன்) நிறுவனத்தின் பாய்லர் வெடித்தது.

சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் நூற்றுக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், இன்று பெட்ரோலியம் பிரித்தெடுக்கும் பகுதியில் பாய்லர் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது.

இதில்,சரவணன், பெருமாள் என்ற  இரு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பெருமாள் என்பவர் சிகிச்சசை பலனின்றி  உயிரிழந்தார். சரவணன் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள  இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாய்லர் வெடித்து உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் பெருமாளின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கவுள்ளதாக இந்திய ஆயில் கார்பரேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்