சேலம், தஞ்சை, கோவையிலும் பரவும் கருப்பு பூஞ்சை: மக்கள் அச்சம்

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (09:04 IST)
தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பொது மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கருப்பு பூஞ்சை என்ற புதிய நோய் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே சென்னை மதுரை உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது கோவை சேலம் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும் கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
கோவை மாவட்டத்தில் மட்டும் ஆறு பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது ஐந்து பேரும் சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் சேலம் மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்