கருப்பு பூஞ்சை நோயால் 8,848 பேர் அவதி - மத்திய அரசு தகவல்!

சனி, 22 மே 2021 (15:02 IST)
நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
தமிழகம் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயை பரவும் நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
ஆம், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 2,281 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்