நாளை முதல் கடுமையான ஊரடங்கு, சந்தைகளில் கூட்டம்! – எகிறிய காய்கறி விலை!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (08:58 IST)
தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வரும் நிலையில் இன்று காய்கறி விலை உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனால் இன்று அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து சந்தைகளில் சில காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி விலை ரூ.50 வரை விற்கப்பட்டு வருகிறது. நாளை முதல் கடும் ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் விலைவாசி உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்