தமிழகத்தில் பாஜக எந்த இடத்திலும் வெற்றி பெறாது- முக .ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (18:54 IST)
மிழகத்தில் பாஜக எந்த இடத்திலும் வெற்றி பெறாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று திமுக கட்சி சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எந்த இடத்திலும் வெற்றி பெறாது. எந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றாலும் அது பாஜக வெற்றி பெற்றதாகவே அர்த்தம் எனக் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு, போன்றவற்றிற்கு எதிராக திமுக சார்பில் டிவி, எஹ்.எம்.இல் விளம்பரங்கள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுகவின் விளம்பரத்திற்கு எதிராக அதிமுகவும் வெற்றி நடைபோடும் தமிழகமவே என விளம்பரம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்