பாஜக, அதிமுகவினுடைய மற்றொரு அணி தான் கமல் அணி: ஆ. ராசா

திங்கள், 22 மார்ச் 2021 (17:52 IST)
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் மொத்தம் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன என்பது தெரிந்ததே. அதிமுக அணி, திமுக அணி, கமல்ஹாசன் அணி, தினகரன் அணி மற்றும் சீமான் அணி. இந்த ஐந்து அணிகளில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், கமல்ஹாசன், டிடிவி தினகரன் மற்றும் சீமான் ஆகிய ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் சீமான் அணியினரை பாஜகவின் ’பி’ டீம் என்று திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக இவர்கள் இருவரும் ஆளும் கட்சியை விட எதிர்கட்சியான திமுகவை தான் அதிகம் விமர்சனம் செய்கிறார்கள் என்றும் அதனால் ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டைப் பிரிப்பதற்காகவே இந்த இரண்டு அணிகளும் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுகவின் முக்கிய பிரமுகராக ஆ.ராசா இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று உதகையில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணி பாஜக-அதிமுகவின் மற்றொரு அணியாகும் என்றும், அந்த அணி திமுகவையும் மதச்சார்பற்ற கூட்டணியையும் வீழ்த்த வேண்டுமென்ற உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்