தாமரை மலர்ந்தே தீரும்: பாஜக புது தலைவரின் பழைய டயலாக்!!

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (11:39 IST)
வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் இருப்பார்கள் என எல்.முருகன் பேட்டி. 
 
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுனராக பதவியேற்றதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவராக பதவி வகித்து வந்த எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். 
 
எல்.முருகன் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். தனது பேட்டியில் அவர் பின்வருமாறு பேசினார்... 
 
பாஜக எப்போதும் நேர்மறையான அரசியலை செய்து வருகிறது. நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம். 
 
2021 ஆம் ஆண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் இருப்பார்கள். பிரதான கட்சியாக பாஜக இருக்கும் என பேட்டியில் பேசினார். 
 
கடந்த தலைவர்களும் பாஜக குறித்து இதையே பேசினார். ஆனால் பாஜகவை ஆட்சியில் வைக்க தமிழக மக்கள் விரும்பவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்